போராட்டம் நடத்த தடையில்லை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

General News
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், மக்கள் தங்கள் உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடுவது அவர்களின் அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் அனைத்துக்கட்சிகள் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு :

Politics
திருச்சியில் திமுக தலைமையில், நீட் தேர்வுக்கு எதிராக இன்று நடைபெறவிருந்த அனைத்துக் கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சில மணி நேரங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ள காவல்துறை, அனுமதி வழங்க முடியாது என அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கம் வென்ற தமிழக வீரர் :

Sports
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பின் நேற்றைய போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார். இவர், ஆண்களுக்கான 77 கிலோ எடை பிரிவின், ஸ்னாட்ச் பிரிவில் 148 கிலோவும், க்ளீன் & ஜெர்க் பிரிவில் 172 கிலோ என மொத்தமாக 320 கிலோ எடை தூக்கி தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கு, சதீஷ் குமார் தகுதி பெற்றுள்ளார். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம், கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்புக் கொடுத்தால் பத்து லட்சம் :

NEWS
கன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஸ், கொலை குறித்து துப்புக் கொடுப்பவருக்கு ரூ.10,00,000 சன்மானமாகத் தரப்படும் எனக் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி  அறிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை :

General News
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தனிநபரோ, கட்சியோ போராட்டம், கடையடைப்பு, சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபடத் தடை. சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING NEWS :

NEWS
கோவை சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு. மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25,000 வழங்கவும் உத்தரவு.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி ஜாமினில் விடுதலை :

NEWS
நெடுவாசல், கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பல போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டதாகவும் சேலம் காவல்துறையினரால், கடந்த ஜூலை 17ம் தேதி கைது செய்யப்பட்டவர் சேலம் மாவட்டம், பெரியார் பல்கலைகழக மாணவி வளர்மதி. பின்னர், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த சேலம் மாநகர போலீஸ், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வளர்மதியின் தந்தை மாதையன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து கோவை சிறையிலிருந்து இன்று அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

BREAKING NEWS:

NEWS
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலி. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர் பொதுமக்கள் மற்றும் போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண் பத்திரிக்கையாளர் மரணத்திற்கு கமல்ஹாசன் இரங்கல் :

General News
கன்னட பெண் பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், "துப்பாக்கியின் மூலம் ஒருவரை அமைதியாக்கி வாதத்தில் வெற்றி பெறுவது மோசமானது " என்று பதிவிட்டுள்ளார். மேலும், அவருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வெற்றி : இலங்கை வாஷ்அவுட்.

Sports
இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டி, கேப்டன் கோஹ்லி மற்றும் மணிஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த இந்த போட்டி மழை காரணமாக சிறிது தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் தில்ஷன் முனவீரா அதிகபட்சமாக 53 ரன்கள் குவித்தார். பின்னர், 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, கேப்டன் கோஹ்லி (82), மணிஷ் பாண்டே (51) அதிரடியில் 19.2 ஓவரில் 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி 3 டெஸ்ட்,