18 எம்எல்ஏ’க்கள் தகுதி நீக்கம் : இன்று விசாரணை.

General News, Politics
டிடிவி.தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ'க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த விவகாரம். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை. முன்னதாக நடந்த விசாரணையில் 18 எம்.எல்.ஏ'க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கேளிக்கை வரி : தீபாவளி முதல் திரையரங்குகள் ஸ்டிரைக்.

Cinema News
திரையரங்குகள், திரைப்படங்கள் மீது ஏற்கனவே நடைமுறையில் உள்ள GST வரி விதிப்பு நீங்கலாக, தமிழக அரசு தற்பொழுது கூடுதலாக 10% கேளிக்கை வரி விதிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழக அரசு கேளிக்கை வரியை உடனே ரத்து செய்யாவிட்டால், தீபாவளி முதல் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் திரையரங்குகள் காலவரையின்றி மூடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், 10% கேளிக்கை வரியை தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால் வரும் 6ம் தேதி முதல் புதிய படங்களை திரையிட மாட்டோம் என்று அறிவித்துள்ளன.

தமிழகத்தின் புதிய ஆளுநர் பதவியேற்க்கும் தேதி அறிவிப்பு :

General News
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல்களை கருத்தில் கொண்டு, சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு நிரந்தர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்படுவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். இந்த நிலையில் வரும் 6ம் தேதி சென்னை-கிண்டி ராஜ்பவனில் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் : இந்திய அணி அறிவிப்பு.

Sports
இந்தியாவுக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி கடந்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி இந்தியா வந்தது. ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றியது. இந்நிலையில் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய வீரர்களின் விவரம் : விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், தோனி, கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆஷிஷ் நெஹ்ரா, மற்றும் அக்ஷர் பட்டேல்.

“எங்கள் அய்யாவிற்கு இன்னும் பெரிதாக செய்வோம்” : ட்விட்டரில் கமல்.

Cinema News
சென்னை அடையாற்றில் தமிழக அரசால் கட்டப்பட்ட, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோருடன் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகுமார், விஷால், கார்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், விழா குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், " விழா இனிதே முடிவுற்றது. எங்கள் அய்யாவிற்கு இன்னும் இது போல் மட்டுமின்றி, இதை விட பெரிதாக செய்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய அணி வெற்றி :

Sports
இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நாக்பூரில் இன்று நடைபெற்ற 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி, ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

“நான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் அல்ல” : யோகா குரு பாபா ராம்தேவ்.

General News
மாட்டு மூத்திரத்தை தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சைகளுக்காக இஸ்லாமியர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர்களின் புனித நூலான குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பதஞ்சலி நிறுவன உரிமையாளர் யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளரும், சர்ச்சைக்கு பெயர் போன சாமியாருமான யோகா குரு பாபா ராம்தேவ், ‘மாட்டு முத்திரத்தை மருத்துவச் சிகிச்சைக்காக பயன்படுத்தலாம் என இஸ்லாமியர்களின் புனிதநூலான குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், பலர் எனது நிறுவனமான பதஞ்சலியை இந்து மதத்திற்கான நிறுவனம் என்று அவதூறு பரப்பி வருகிறார்கள். நான் என்றாவது இஸ்லாமிய சகோதரகளான ஹமீது சகோதரர்களின் ஹம்தார்த் நிறுவனம் மற்றும் ஹிமாலயா மருந்து நிறுவனத்திற்கு எதிராக பேசியுள்ளேனா? எனது முழு ஆதரவும் அவர்களுக்கு என்றும் உண்டு. இவ்

“நாட்டை விட்டு ஓடுவேன் என்றவர்களுக்கு அரசியலில் இடம் கொடுக்கக் கூடாது” : ராதாரவி.

Politics
சென்னை தேனாம்பேட்டையிலுள்ள கலைஞர் அரங்கத்தில், திமுக எம்.பி திருச்சி சிவா தலைமையில் இன்று நடைபெற்ற திமுக பேச்சாளர்களை நெறிப்படுத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி, "சினிமாத் துறையினரை அரசியலில் வளர்த்து விடக் கூடாது, முக்கியமாக நாட்டை விட்டு ஓடுவேன் என்றவர்களுக்கு அரசியலில் இடம் கொடுக்கக் கூடாது" என்று நடிகர் கமல்ஹாசனை சாடினார். மேலும், நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என்று மக்களை குழப்பி வருகிறார் என்றும் தெரிவித்தார்.

பிரபல பாலிவுட் நடிகர் மரணம் :

Cinema News
பிரபல பாலிவுட் நடிகர் டாம் ஆல்டர் (67) புற்று நோய் காரணமாக சிகிச்சை பலனின்றி மும்பையில் நேற்று மாலை காலமானார். இவர் ஆஷிக்கி, காந்தி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.