Sports

ஆஸி. அணிக்கு 253 ரன்கள் இலக்கு :

Sports
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 252 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 253 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு :

Sports
தென் ஆப்ரிக்க அணியின் ஆல்ரவுண்டர் ஜே.பி.டுமினி (33 வயது) டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள டுமினி 6 சதங்கள் மற்றும் 42 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

சுதந்திர கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் சாம்பியன்.

Sports
பாகிஸ்தான் நாட்டின் கடாஃபி மைதானத்தில் நடைபெற்ற பாஃப் டு பிளசிஸ் தலைமையிலான உலக லெவன் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் 33 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. முன்னதாக டாஸ் வென்ற உலக லெவன் அணி, பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக். இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. அஹமது சேஷாத் அதிகபட்சமாக 89 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய உலக லெவன் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக். இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 33 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியை தழுவிய உலக லெவன் அணி கோப்பையையும் நழுவ விட்டது.

தங்கம் வென்ற தமிழக வீரர் :

Sports
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பின் நேற்றைய போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார். இவர், ஆண்களுக்கான 77 கிலோ எடை பிரிவின், ஸ்னாட்ச் பிரிவில் 148 கிலோவும், க்ளீன் & ஜெர்க் பிரிவில் 172 கிலோ என மொத்தமாக 320 கிலோ எடை தூக்கி தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கு, சதீஷ் குமார் தகுதி பெற்றுள்ளார். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம், கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வெற்றி : இலங்கை வாஷ்அவுட்.

Sports
இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டி, கேப்டன் கோஹ்லி மற்றும் மணிஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த இந்த போட்டி மழை காரணமாக சிறிது தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் தில்ஷன் முனவீரா அதிகபட்சமாக 53 ரன்கள் குவித்தார். பின்னர், 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, கேப்டன் கோஹ்லி (82), மணிஷ் பாண்டே (51) அதிரடியில் 19.2 ஓவரில் 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி 3 டெஸ்ட்,

டி.என்.பி.எல் 2 : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சாம்பியன் :

Sports
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக்'கின் 2-வது சீசனின் இறுதிப் போட்டியில், ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக்கம் அணி கோப்பையை கைப்பற்றியது.

ஸ்பானிஸ் சூப்பர் கோப்பை: ரியல் மாட்ரிட் சாம்பியன்.

Sports
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற ஸ்பானிஸ் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணியை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஸ்பானிஸ் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டிக்கு பார்சிலோனா மற்றும் ரியல் மார்டிட் அணிகள் தகுதிபெற்றிருந்த நிலையில், இறுதிப்போட்டிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. அதன்படி முதற்கட்ட இறுதிப்போட்டி கடந்த 14ம் தேதி நடைபெற்றது இதில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை மாட்ரிட் நகரில் நடைபெற்ற இரண்டாவது கட்ட இறுதிப்போட்டியிலும் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5-1 என்ற மொத்த கோல் அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

ஜடேஜா விளையாட தடை :

Sports
இலங்கைக்கு எதிராக வரும் 12ம் தேதி பல்லேகலே'வில் நடைபெறவிருக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா விளையாட தடை. விதிகளை மீறியதாகவும், விதிகளை முறையாக பின்பற்றாத காரணத்தாலும் அவர் மீது ஐ.சி.சி. ஒழுங்கு நடவடிக்கை.

இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி :

Sports
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான கொழும்புவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 கைப்பற்றியது. முன்னதாக, டாஸ் வென்று தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புஜாரா 133 ரன்களும், ரகானே 132 ரன்களும் எடுத்தனர். பின்னர், தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இலங்கை அணி அஸ்வின் சூழலில் தாக்குப்பிடிக்க முடியாமல் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 439 ரன்கள் பின்தங்கியிருந்த இலங்கை அணிக்கு இந்திய அணி பாலோ-ஆன் கொடுத்தது. இந்த முறை சற்று நிதானமாக ஆட்டத்தை துவங்கிய இலங்கை அணி 386 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியடைந்தது.. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கருணாரத்னே (141)

தனது இறுதிப் போட்டியில் மூன்றாமிடம் : உசைன் போல்ட் சோகம்.

Sports
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 16-வது உலக தடகள போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. 205 நாடுகள் பங்கேற்கும் இதில் 24 போட்டிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பிரபல ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் இந்த தொடருடன் ஓய்வு பெறப்போவதாக முன்னரே அறிவித்திருந்தார். இந்நிலையில், மிக முக்கிய போட்டியான 100மீ ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில், அமெரிக்க வீரர் கட்லின் பந்தய தூரத்தை 9.92 விநாடி, அவரது சக நாட்டு வீரரான கிறிஸ்டியன் கோல்மேன் 9.94 விநாடி என முதல் இரண்டு இடங்களைப் பெற போல்ட் 9.95 விநாடிகளில் மூன்றாம் இடத்திற்கு வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். உலகின் மின்னல் வேக வீரர் என ரசிகர்களால் புகழப்படும் உசைன் போல்ட், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் என பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆவார். உலக தடகள வரலாற்றில் 11 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும்