General News

“என் கட்சியில் ரஜினிகாந்த்” : நடிகர் கமல்ஹாசன்.

General News
நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்க தயாராகிவிட்ட நிலையில், தற்பொழுது ரஜினியுடன் அரசியல் பேசத் தயார் என்று கூறி மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளார். சென்னையில் இன்று மாலை 'யாதும் தமிழே' என்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் கமல்ஹாசன், "தமிழக மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வரத் தயார். அரசியலுக்கு வந்தபின் ரஜினியுடன் பேசத் தயார், அவர் விரும்பினால் எனது கட்சியில் இணைத்துக் கொள்வேன்" என்று தெரிவித்தார். மேலும், "அறவழியில் போராடுவதே ஆரம்பம், அஹிம்சையின் உச்சகட்டமே போராட்டம். நான் தொழிலுக்கு நடிக்கிறேன், சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர்" என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார். முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது இன்றைய பேச்சு அதை உறுதி செய்திருப்பதாகவும், அதன்படி வரும் அக். 2ம் தேதியன்று நடிகர் கமல்ஹாசன்

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? நீதிமன்றம் உத்தரவு.

General News
"இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்து வரும் அக்.31ம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும்" என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

நீதிமன்றத்தின் எச்சரிக்கை எம்.எல்.ஏ’க்களுக்கு இல்லையா? – நடிகர் கமல்ஹாசன்.

General News
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 10 நாட்களுக்கும் மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கிருபாகரன் இடைக்கால தடை விதித்தார். ஆனால், அதனை பொருட்படுத்தாத ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, "அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு மணி நேரத்தில் போராட்டத்தை கைவிட்டு, பிற்பகல் 2 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், "எந்த நிபந்தனையும் வைக்காமல் போராட்டத்தை வாபஸ் பெற்றால் தலைமைச் செயலாளர் முன்பு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும்" என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார். இந்நிலைய

“நேரடி அரசியலுக்கு இதுதான் தக்க சமயம்” : உள்ளாட்சித் தேர்தலை குறி வைக்கும் உலக நாயகன்.

Politics
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பதை தாண்டி தற்பொழுது நேரடி அரசியலுக்கு அவர் தயாராகி விட்டார் என்பதே ஹாட் நியூஸ். அதே சமயம் அது தனிக்கட்சியா? அல்லது மற்ற கட்சியில் இணைப்பா? என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், தனிக்கட்சிதான் எனக் கூறி தற்பொழுது பரபரப்பை கூட்டியுள்ளார். இது குறித்து, ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "ஆம், நான் தனிக்கட்சி தொடங்குவது பற்றி தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அது கட்டாயத்தால் ஏற்பட்ட முடிவு. ஏனென்றால், இப்பொழுது இருக்கும் கட்சிகள் எதுவும் என் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்றவையல்ல. அரசியல் கட்சி என்பது சித்தாந்தம் சார்ந்தது.நான் பினராயி விஜயனை சந்தித்த உடனே நான் கம்யூனிச ஆர்வத்தை பெருக்கிக்கலாம். ஆனால், ஒரு கட்சியில் இணைவது என்பது நம்பிக்கை கொள்வது, தப்புவது, தாவுவது போன்ற எளிய காரியமல்ல. என்னுடைய அரசியல் இலக்குகளை இப்போதுள்ள கட

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ’விடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை :

NEWS
நாமக்கல் அரசு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் கொலை வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ பழனியப்பனை, நேற்றிரவு கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள தனியார் சொகுசு விடுதியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார், அவரிடம் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் : நீதிபதிகள் கண்டனம்.

General News
கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் மணல் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பழனிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இன்று இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ரவுடிகள், சமூக விரோதிகளே பணியில் உள்ளனர். இதனை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளாதது ஏன் ? விதிமுறைகளை மீறும் சுங்கச்சாவடி ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? என்று கண்டனம் தெரிவித்தனர். பின்னர், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

ஆட்சியை கலைக்கும் நேரமிது : டிடிவி.தினகரன்.

Politics
"எடப்பாடி தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை கலைக்கும் நேரம் வந்துவிட்டது. அதற்கான நடவடிக்கையை தொடங்கிவிட்டோம்" என டிடிவி.தினகரன் அதிரடி.

டாக்டர்.அனிதா குடும்பத்திற்கு நடிகர் விஜய் நிதியுதவி.

General News
நீட் தேர்வு காரணமாக விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி டாக்டர்.அனிதாவின் இல்லத்திற்கு இன்று நேரில் வந்த நடிகர் விஜய், அனிதாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்த விஜய், ரூபாய் 1லட்சம் நிதியுதவி வழங்கினார்.

அவசர ஆலோசனை :

General News
நீட் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவது குறித்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், டிஜிபி டிகே.ராஜேந்திரன் ஆகியோர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.