General News

BREAKING NEWS :

NEWS
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வரும் 14ந் தேதி தனது சுற்றுப்பயணத்தை மதுரை மேலூரில் தொடங்குகிறார். ஆகஸ்ட். 23 - வட சென்னை, 29 - தேனி, செப். 5 - கரூர் என சுற்றுப்பயண பட்டியல் நீள்கிறது.

இரு அணிகளும் விரைவில் இணையும் : அமைச்சர் நம்பிக்கை.

NEWS
அதிமுக ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரு அணிகளும் தங்கள் மனஸ்தாபங்களை களைந்து விரைவில் இணையும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருவாரூரில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாளை முதல் டிடிவி தினகரன் தொடங்கவிருக்கும், கட்சி பணிகள் குறித்து எங்களுக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை" என்றும் தெரிவித்தார்.

சிவாஜி சிலை குறித்து கமல் ட்வீட் :

General News
சென்னை மெரினா கடற்கரை ராதாகிருஷ்ணன் சாலையில் நிறுவப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை, நீதிமன்ற உத்தரவுப்படி அங்கிருந்து அகற்றப்பட்டு, அடையாறு அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் சிவாஜி கணேசன் மணிமண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது பெரும் சர்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரசிகர் மனதிலும், நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர் சிவாஜி. இனி ஒரு சிலை செய்வோம்; அதை எந்நாளும் காப்போம்; அரசுக்கு அப்பால் என் அப்பா " என்று பதிவிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல்: இன்றைய விலை நிலவரம்.

General News
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட்- 4) காலை 6 மணி முதல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.68.34 பைசாவிற்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.59.04 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

வரலாற்றுச் சரித்திரத்தில் இன்று:

General News
பராக் உசைன் ஒபாமா (Barack Hussein Obama) (பிறப்பு: ஆகஸ்ட் 4, 1961). அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார், நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார். அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

கமல் நிலையை நினைத்து கவலை : நாஞ்சில் சம்பத்.

NEWS
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை இன்று நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், "அதிமுக அரசு ஒரு ஊழல் அரசு என்று கூறுபவர்கள் ஆதாரத்துடன் கூற வேண்டும். நடிகர் கமல்ஹாசனும் அரசு ஊழலில் திளைத்திருப்பதாகக் கூறுகிறார். அவருக்கு தற்பொழுது சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டது. அதனால் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். ஒரு மிகப்பெரிய கலைஞனுக்கு இது போன்றதொரு நிலைமை ஏற்பட்டிருப்பது என்னை கவலையில் ஆழ்த்தியுள்ளது" என்று தெரிவித்தார்.

பிரேக்கிங் நியூஸ்

NEWS
“நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு நிரந்தர விலக்குக் கிடைக்க வாய்ப்பில்லை”- மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

பேருந்து மீது விளம்பர பலகை விழுந்து விபத்து :

General News
சென்னை அண்ணாசாலை, ஸ்பென்சர் அருகே மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து பாரிமுனை சென்ற அரசு பேருந்து மீது வழிகாட்டு விளம்பரப் பெயர் பலகை விழுந்து விபத்து. 6 பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் ராயப்பேபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வரலாற்றுச் சரித்திரத்தில் இன்று :

General News
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1976 ஆகஸ்ட் 3 ஆம் நாள் மத்திய அரசால் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகமாகியது. திண்டுக்கல் மாவட்டத்தின் காந்திகிராமத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கிராம சமுதாய அறிவியல், கிராம வளர்ச்சி, அயல்நாட்டு மொழிகள், தமிழ், இந்திய மொழிகள், கிராமியக் கலைகள், கிராம சுகாதாரம் மற்றும் நலவாழ்வு போன்ற துறைகள் இங்கு உள்ளன.