General News

ஓபிஎஸ் கிணறு : மீண்டும் தொடங்கியது போராட்டம்.

NEWS
தேனி மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ராட்சத கிணறுகளால் கிராமத்தின் பிற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபடத் தொடங்கினர். இத்தகவலை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் கிணற்றை கிராமத்திற்கே தானமாக வழங்குவதாக அறிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தநிலையில் இதுவரை கிணறு கிராம மக்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் தற்பொழுது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.மேலும், கிணற்றை தங்களிடம் ஒப்படைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும், தவறினால் சென்னையிலுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டின் முன்பும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவோம் என்றும் எ

ஜடேஜா விளையாட தடை :

Sports
இலங்கைக்கு எதிராக வரும் 12ம் தேதி பல்லேகலே'வில் நடைபெறவிருக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா விளையாட தடை. விதிகளை மீறியதாகவும், விதிகளை முறையாக பின்பற்றாத காரணத்தாலும் அவர் மீது ஐ.சி.சி. ஒழுங்கு நடவடிக்கை.

இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி :

Sports
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான கொழும்புவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 கைப்பற்றியது. முன்னதாக, டாஸ் வென்று தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புஜாரா 133 ரன்களும், ரகானே 132 ரன்களும் எடுத்தனர். பின்னர், தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இலங்கை அணி அஸ்வின் சூழலில் தாக்குப்பிடிக்க முடியாமல் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 439 ரன்கள் பின்தங்கியிருந்த இலங்கை அணிக்கு இந்திய அணி பாலோ-ஆன் கொடுத்தது. இந்த முறை சற்று நிதானமாக ஆட்டத்தை துவங்கிய இலங்கை அணி 386 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியடைந்தது.. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கருணாரத்னே (141)

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வெங்கய்யா நாயுடு வெற்றி.

Politics
நேற்று டெல்லியில் நடந்து முடிந்த துணைக்குடியரசுத் தேர்தலில் 516 வாக்குகள் பெற்று நாட்டின் 15 வது துணைக்குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார் வெங்கய்ய நாயுடு. இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி - 244 வாக்குகள் பெற்றார். வரும் 11ம் தேதி பதவியேற்கவிருக்கும் வெங்கய்ய நாயுடுவிற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனது இறுதிப் போட்டியில் மூன்றாமிடம் : உசைன் போல்ட் சோகம்.

Sports
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 16-வது உலக தடகள போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. 205 நாடுகள் பங்கேற்கும் இதில் 24 போட்டிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பிரபல ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் இந்த தொடருடன் ஓய்வு பெறப்போவதாக முன்னரே அறிவித்திருந்தார். இந்நிலையில், மிக முக்கிய போட்டியான 100மீ ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில், அமெரிக்க வீரர் கட்லின் பந்தய தூரத்தை 9.92 விநாடி, அவரது சக நாட்டு வீரரான கிறிஸ்டியன் கோல்மேன் 9.94 விநாடி என முதல் இரண்டு இடங்களைப் பெற போல்ட் 9.95 விநாடிகளில் மூன்றாம் இடத்திற்கு வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். உலகின் மின்னல் வேக வீரர் என ரசிகர்களால் புகழப்படும் உசைன் போல்ட், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் என பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆவார். உலக தடகள வரலாற்றில் 11 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும்

பெட்ரோல், , டீசல் : இன்றைய விலை நிலவரம்.

General News
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட்- 6) காலை 6 மணி முதல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.68.88 பைசாவிற்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.59.51 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

வரலாற்றுச் சரித்திரத்தில் இன்று :

General News
ஜமைக்கா கரிபியக் கடலில் அமைந்துள்ள 240 கி.மீ. நீளமும் 85 கி.மீ. அகலமும் கொண்ட ஒர் தீவு நாடாகும். இது மத்திய அமெரிக்க பெருநிலப்பரப்பில் இருந்து 635 கி.மீ. கிழக்காகவும் கியுபாவுக்கு 150 கி.மீ. தெற்காகவும் அமைந்துள்ளது. யமேக்காவின் பழங்குடியினரான அரவக்கன் இந்தியர்கள் பேசு மொழியான டைனொ மொழியில் தமது நாட்டை "சைமேக்கா" - ஊற்றுகளின் நாடு என அழைத்தனர். முதலில் ஸ்பெயினின் குடியேற்றவாத நாடாக இருந்த யமேக்கா பின்னாளில் ஐக்கிய இராச்சியத்தின் அரசாட்சிக்குட்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 6 1962ம் ஆண்டு ஐக்கிய ராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்றது. இது ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் கண்டத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்றாவது நாடாகும்.

தொடங்கியது வாக்குப்பதிவு :

NEWS
இந்திய நாட்டின் 15வது துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன் பாராளுமன்ற வளாகத்தில் தொடங்கியது.களத்தில் பா.ஜ.க கூட்டணி சார்பில் வெங்கய்ய நாயுடுவும், காங்கிரஸ் உட்பட 18 எதிர்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால் கிருஷ்ண காந்தியும் உள்ளனர். தேர்தல் முடிவு இன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.