Politics

எம்எல்ஏ’க்கள் நீக்கம் : குஜராத் காங்கிரஸில் அதிரடி.

Politics
குஜராத்தில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உட்பட 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நீக்கம். குஜராத்தில் நேற்று நடைபெற்று முடிந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்களுான தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததால் குஜராத் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலா உட்பட 8 எம்எல்ஏக்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

குஜராத் தேர்தல் : அகமது பட்டேல் வெற்றி.

Politics
குஜராத்தின் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இத்தேர்ததலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ'க்கள் பலர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும் என்ற பதற்றமான சூழல் நிலவிய நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த அகமது படேல் வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ'க்கள் வார்த்தை மோதலால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது குறிப்பிடத்தக்கது. மேலும், 3 உறுப்பினர்களுக்கான தேர்தலில் மீதமுள்ள இரண்டு உறுப்பினர்களாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் வெற்றி பெற்றனர். 

செங்கோட்டையனுடன் மோதத் தயார் : நாள் குறித்தார் அன்புமணி.

Politics
தமிழக கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து வரும் 12ம் தேதி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில்,விவாதிக்கத் தயார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து தம்முடன் விவாதம் நடத்தத் தயாரா? என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்திருந்த நிலையில், அதையேற்று அவருடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தேன். அதன்படி விவாதத்திற்கான நாளையும், இடத்தையும் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அமைச்சர், தற்பொழுது விவாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாங்களே செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார். பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து விவாதம் நடத்தத்

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வெங்கய்யா நாயுடு வெற்றி.

Politics
நேற்று டெல்லியில் நடந்து முடிந்த துணைக்குடியரசுத் தேர்தலில் 516 வாக்குகள் பெற்று நாட்டின் 15 வது துணைக்குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார் வெங்கய்ய நாயுடு. இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி - 244 வாக்குகள் பெற்றார். வரும் 11ம் தேதி பதவியேற்கவிருக்கும் வெங்கய்ய நாயுடுவிற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.