Politics

ஆட்சியை கலைக்கும் நேரமிது : டிடிவி.தினகரன்.

Politics
"எடப்பாடி தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை கலைக்கும் நேரம் வந்துவிட்டது. அதற்கான நடவடிக்கையை தொடங்கிவிட்டோம்" என டிடிவி.தினகரன் அதிரடி.

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் அனைத்துக்கட்சிகள் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு :

Politics
திருச்சியில் திமுக தலைமையில், நீட் தேர்வுக்கு எதிராக இன்று நடைபெறவிருந்த அனைத்துக் கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சில மணி நேரங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ள காவல்துறை, அனுமதி வழங்க முடியாது என அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இணைப்பு அல்ல ; பதவி ஆசைக்காக போடப்பட்ட உடன்படிக்கை : டிடிவி.தினகரன்.

Politics
"அதிமுகவின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இரு அணிகள் இணைந்தது இணைப்பு அல்ல, அவர்களின் சுயலாபத்திற்காகவும், பதவி ஆசைக்காகவும், பதவியை காப்பாற்றி கொள்வதற்காகவும் போடப்பட்ட வணிக ரீதியான உடன்படிக்கை" என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது அந்த இறைவனுக்குத் தான் தெரியும். புரட்சித் தலைவி மாண்புமிகு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமியையும் முதல்வராக்கி அழகு பார்த்த கழக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு துரோகம் செய்த இவர்களை தொண்டர்களும், பொதுமக்களும் மன்னிக்க மாட்டார்கள்" என்றும் தெரிவித்தார்.

இன்று இணைகிறது அதிமுக ?:

Politics
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பகல் 12 மணியளவில் நேரில் சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திப்புக்குப் பின் இரு அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற நிலையில் அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை பயணத்தை ரத்து செய்து அவசர அவசரமாக சென்னை திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை : ஓபிஎஸ் கோரிக்கைக்கு எடப்பாடி ஆதரவா ?

Politics
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும், அவரது போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார். இதன் மூலம், ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கையை முதலமைச்சர் வெளிப்படையாக ஆதரிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி மற்றும் டிடிவி அணி என மூன்றாக பிரிந்துவிட்டது. பின்னர், இணைப்புக்கான பேச்சுவார்த்தையின் ஆரம்ப கட்டத்தில் சசிகலா தரப்பினரை கட்சியை விட்டு விலக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தது ஓபிஎஸ் அணி. இதனை ஏற்க மறுத்த எடப்பாடி அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆளுக்கொரு அறிக்கை விடுத்தனர். பின்னர், டிடிவி தினகரனை மட்டும் கட்சியை விட்டு ஒதுக

மதரஸாக்கள் தேசிய கீதம் பாடிய வீடியோ பதிவு : உ.பி அரசின் உத்தரவால் சர்ச்சை.

Politics
இந்தியாவின் 71 வது சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து மதரஸாக்களிலும் கட்டாயமாக தேசியகீதம் பாட வேண்டும் என்றும்,  அதனை வீடியோ ஆதாரமாக பதிவு செய்து அனுப்ப வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. உ.பி அரசின் இந்த உத்தரவு அங்கு வாழும் இஸ்லாமியர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர், மீரட், பரெய்லி ஆகிய இடங்களில் உள்ள மதரஸா மாணவர்கள் 'தேசிய கீதம்' பாடுவதற்கு பதிலாக, 'சாரே ஜஹான் சே அச்சா' என்ற பாடலை பாடியதாகவும், தேசியகீதம் பாடவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கட்சிக்கும், நடைபெறும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை, ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல : டிடிவி.தினகரன் எச்சரிக்கை.

Politics
"அதிமுக என்னும் கட்சிக்கும், நடைபெறும் எடப்பாடி தலைமையிலான அரசுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. கட்சி எங்களிடமே உள்ளது. அதை சிலர் கொள்ளைப்புறமாக கைப்பற்றிவிடலாம் என எண்ணி வருகிறார்கள்" என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,"கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் துணைப் பொதுச் செயலாளரால் கொடுக்கப்பட்ட பொருளாளர் பதவியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ராஜினாமா செய்வாரா? என்றும், 10 வருடம் அரசியலில் இருந்து காணாமல் போனவர் சீனிவாசன், அவருக்கு மறுவாழ்வு கொடுத்தது சசிகலா'வும் நானும் தான்" என்றும் விமர்சித்துள்ளார். தொடர்ந்து, "அமைச்சர் ஜெயக்குமார் எங்களை எட்டப்பன் என்கிறார். எட்டப்பன் யார் என்பது அவர் கண்ணாடி முன்னால் நின்று பார்த்தால் தெரியும், எங்களுக்கு ஆட்சியை

தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு : ஓபிஎஸ் அணி அறிவிப்பு.

Politics
தமிழக அரசுக்கு எதிராக வரும் 18ம் தேதி நடக்கவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக ஓ.பி.எஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர்: "வரும் ஆக.19ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற இருப்பதால் 18ம் தேதி சென்னையில் நடத்தவிருந்த எடப்பாடி அரசின் ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது" என தெரிவித்தார் முன்னதாக, நீட் தோ்வு விவகாரம், குடிநீா் பிரச்சினை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மக்கள் நலன் கருதி விரைவான முடிவினை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 10ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி :

Politics
திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான டாக்டர் மு.கருணாநிதி அவர்கள், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். சாதாரண மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், செயற்கை உணவு குழாய் மாற்றுவதற்காக அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார், சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புவார் என்று திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“கமல் அரசியலுக்கு வருவார்” – நாஞ்சில் சம்பத்.

Politics
நடிகர் கமல்ஹாசனின் நடவடிக்கையை பார்த்தால் அவர் அரசியலுக்கு வருவார் என நினைக்கிறேன். அவ்வாறு வந்தால் அதை நான் வரவேற்கிறேன்" என்று அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் கமல்ஹாசன் தக்க ஆதாரங்களோடு குற்றம்சாட்டினால் அதற்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றும், முனை மழுங்கிய கருவி என கமல் குறிப்பிட்டது திமுகவுக்குத் தான் பொருந்தும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.