NEWS

முடிந்தது சந்திர கிரகணம் :

NEWS
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது “சந்திர கிரகணம்” ஏற்படும். இது கடைசியாக இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இந்த நிலையில் 6 மாத இடைவெளிக்குப் பிறகு நேற்று நள்ளிரவு மீண்டும் அந்த நிகழ்வு நடைபெற்றது. அதன்படி, நேற்றிரவு சரியாக 10.53 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.48 மணி வரை சந்திர கிரகணம் நீடித்தது. அதாவது சரியாக 1 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்த நிகழ்வின் போது சந்திரன் 75 சதவீதம் வெளிச்சமாகவும், 25 சதவீதம் இருளாகவும் காணப்பட்டது. இந்த சந்திர கிரகணத்தை ஆசியா கண்டத்தில் உள்ளவர்களும், ஆஸ்திரேலியர்களும் முழுமையாக காண முடிந்தது. ஆனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

இரண்டு பேருந்துகள் மோதிய விபத்து: 50 பேர் காயம்.

NEWS
நாமக்கல் மாவட்டம் நெய்காரப்பட்டி அருகே இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். பின்னர், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அருகிலிருந்த திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதலுதவி வழங்கப்பட்டது.மேலும், படுகாயமடைந்த 5க்கும் மேற்ப்பட்டோர் தீவிர சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் களத்தில் கமல் : பிரபல ஜோதிடர் கணிப்பு.

NEWS
"நடிகர் கமல்ஹாசன் இன்னும் ஓராண்டிற்குப் பிறகு நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்றும், அதுவரை தொடர்ந்து தனது கருத்துக்களை தெரிவிப்பார் என்றும்" பிரபல ஜோதிடர் சிவல்புரி சிங்காரம் கணித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "நடிகர் கமல்ஹாசனின் ஜாதகப்படி சூரியன், செவ்வாய் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் உச்சத்தில் இருக்கிறது. மேலும், எதிர்வரும் குரு பெயர்ச்சி நிகழ்வும் அவருக்கு சாதகமான பலன்களையே தரும். அதன்படி அடுத்த ஆண்டு முதல் அவர் தீவிர அரசியலில் ஈடுபடும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் கிணறு : மீண்டும் தொடங்கியது போராட்டம்.

NEWS
தேனி மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ராட்சத கிணறுகளால் கிராமத்தின் பிற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபடத் தொடங்கினர். இத்தகவலை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் கிணற்றை கிராமத்திற்கே தானமாக வழங்குவதாக அறிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தநிலையில் இதுவரை கிணறு கிராம மக்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் தற்பொழுது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.மேலும், கிணற்றை தங்களிடம் ஒப்படைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும், தவறினால் சென்னையிலுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டின் முன்பும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவோம் என்றும் எ

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வெங்கய்யா நாயுடு வெற்றி.

Politics
நேற்று டெல்லியில் நடந்து முடிந்த துணைக்குடியரசுத் தேர்தலில் 516 வாக்குகள் பெற்று நாட்டின் 15 வது துணைக்குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார் வெங்கய்ய நாயுடு. இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி - 244 வாக்குகள் பெற்றார். வரும் 11ம் தேதி பதவியேற்கவிருக்கும் வெங்கய்ய நாயுடுவிற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடங்கியது வாக்குப்பதிவு :

NEWS
இந்திய நாட்டின் 15வது துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன் பாராளுமன்ற வளாகத்தில் தொடங்கியது.களத்தில் பா.ஜ.க கூட்டணி சார்பில் வெங்கய்ய நாயுடுவும், காங்கிரஸ் உட்பட 18 எதிர்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால் கிருஷ்ண காந்தியும் உள்ளனர். தேர்தல் முடிவு இன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

BREAKING NEWS :

NEWS
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வரும் 14ந் தேதி தனது சுற்றுப்பயணத்தை மதுரை மேலூரில் தொடங்குகிறார். ஆகஸ்ட். 23 - வட சென்னை, 29 - தேனி, செப். 5 - கரூர் என சுற்றுப்பயண பட்டியல் நீள்கிறது.

இரு அணிகளும் விரைவில் இணையும் : அமைச்சர் நம்பிக்கை.

NEWS
அதிமுக ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரு அணிகளும் தங்கள் மனஸ்தாபங்களை களைந்து விரைவில் இணையும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருவாரூரில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாளை முதல் டிடிவி தினகரன் தொடங்கவிருக்கும், கட்சி பணிகள் குறித்து எங்களுக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை" என்றும் தெரிவித்தார்.

கமல் நிலையை நினைத்து கவலை : நாஞ்சில் சம்பத்.

NEWS
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை இன்று நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், "அதிமுக அரசு ஒரு ஊழல் அரசு என்று கூறுபவர்கள் ஆதாரத்துடன் கூற வேண்டும். நடிகர் கமல்ஹாசனும் அரசு ஊழலில் திளைத்திருப்பதாகக் கூறுகிறார். அவருக்கு தற்பொழுது சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டது. அதனால் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். ஒரு மிகப்பெரிய கலைஞனுக்கு இது போன்றதொரு நிலைமை ஏற்பட்டிருப்பது என்னை கவலையில் ஆழ்த்தியுள்ளது" என்று தெரிவித்தார்.

பிரேக்கிங் நியூஸ்

NEWS
“நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு நிரந்தர விலக்குக் கிடைக்க வாய்ப்பில்லை”- மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.