NEWS

அசல் ஓட்டுநர் உரிமம் : சிறை தண்டனை தேவையில்லை.

NEWS
அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களுக்கு 3 மாத சிறை தண்டனை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், பாஸ்போர்ட் நகலை வைத்துக்கொண்டு வெளிநாடு செல்வது எப்படி சாத்தியமில்லையோ, அதுபோல, அசல் ஓட்டுநர் உரிமும் அவசியமே என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

உடற்கல்வி ஆசிரியர் தேர்வு தடை நீக்கம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

NEWS
உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை. இதன் மூலம், நாளை நடைபெறவிருந்த உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் நாளை டெல்லி பயணம் :

Politics
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்காக நாளை டெல்லி செல்கின்றனர். டெல்லி செல்லும் குழுவில் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், மைத்ரேயன் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக நீதி மாநாடு;வீரப்பன் புகைப்படம் உபயோகப்படுத்தத் தடை : கட்டுக்கோப்புடன் வருமாறு தொண்டர்களுக்கு டாக்டர்.ராமதாஸ் உத்தரவு.

Politics
விழுப்புரத்தில் வரும் செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி மாநாட்டை நடத்த இருக்கிறார் பா.ம.க நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ். வன்னியர் சங்க விழாவுக்கு வருவது போல, இந்த விழாவில் பங்கேற்கக் கூடாது என பல உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். அதில், குறிப்பாக வீரப்பன் புகைப்படம் அச்சிடப்பட்ட உடைகளை அணியக் கூடாது என்பது பெரும் முக்கியதுவம் பெற்றுள்ளது. இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் யாரும் செப்டம்பர் 17-ந்தேதியை மறக்க முடியாது. அது தந்தைப் பெரியாரின் பிறந்தநாள் மட்டுமல்ல; தமிழகத்தில் சமூகநீதி தழைப்பதற்காக 21 பேர் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த நாள். அந்த தியாகம் தான் தமிழ்நாட்டிலுள்ள 108 சமுதாயங்களைச் சேர்ந்த மூன்று கோடி மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்து சமூக நீதியை நிலை நிறுத்தியது. வரும் 17-ந்தேதி மாலை 4 மணிக்கு

“நேரடி அரசியலுக்கு இதுதான் தக்க சமயம்” : உள்ளாட்சித் தேர்தலை குறி வைக்கும் உலக நாயகன்.

Politics
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பதை தாண்டி தற்பொழுது நேரடி அரசியலுக்கு அவர் தயாராகி விட்டார் என்பதே ஹாட் நியூஸ். அதே சமயம் அது தனிக்கட்சியா? அல்லது மற்ற கட்சியில் இணைப்பா? என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், தனிக்கட்சிதான் எனக் கூறி தற்பொழுது பரபரப்பை கூட்டியுள்ளார். இது குறித்து, ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "ஆம், நான் தனிக்கட்சி தொடங்குவது பற்றி தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அது கட்டாயத்தால் ஏற்பட்ட முடிவு. ஏனென்றால், இப்பொழுது இருக்கும் கட்சிகள் எதுவும் என் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்றவையல்ல. அரசியல் கட்சி என்பது சித்தாந்தம் சார்ந்தது.நான் பினராயி விஜயனை சந்தித்த உடனே நான் கம்யூனிச ஆர்வத்தை பெருக்கிக்கலாம். ஆனால், ஒரு கட்சியில் இணைவது என்பது நம்பிக்கை கொள்வது, தப்புவது, தாவுவது போன்ற எளிய காரியமல்ல. என்னுடைய அரசியல் இலக்குகளை இப்போதுள்ள கட

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ’விடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை :

NEWS
நாமக்கல் அரசு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் கொலை வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ பழனியப்பனை, நேற்றிரவு கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள தனியார் சொகுசு விடுதியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார், அவரிடம் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்சியை கலைக்கும் நேரமிது : டிடிவி.தினகரன்.

Politics
"எடப்பாடி தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை கலைக்கும் நேரம் வந்துவிட்டது. அதற்கான நடவடிக்கையை தொடங்கிவிட்டோம்" என டிடிவி.தினகரன் அதிரடி.

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் அனைத்துக்கட்சிகள் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு :

Politics
திருச்சியில் திமுக தலைமையில், நீட் தேர்வுக்கு எதிராக இன்று நடைபெறவிருந்த அனைத்துக் கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சில மணி நேரங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ள காவல்துறை, அனுமதி வழங்க முடியாது என அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்புக் கொடுத்தால் பத்து லட்சம் :

NEWS
கன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஸ், கொலை குறித்து துப்புக் கொடுப்பவருக்கு ரூ.10,00,000 சன்மானமாகத் தரப்படும் எனக் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி  அறிவித்துள்ளார்.