NEWS

“சினிமா” தமிழர்களின் கலாசார பிரதிபலிப்பு : ராகுல்காந்தி.

General News, Politics
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள 'மெர்சல்' படத்தில் மத்திய அரசுக்கு எதிரான மற்றும் போலியான கருத்துக்கள் இருப்பதாகவும், அதை உடனே நீக்க வேண்டும் என தமிழக பா.ஜ.கவினர் குரல் கொடுத்து வரும் நிலையில்., தற்பொழுது மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்து, ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார் ராகுல்காந்தி. அதில், "படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்களின் பெருமையை மதிப்பிழக்க செய்ய வேண்டாம். தமிழகத்தில் சினிமா என்பது அவர்களின் ஆழமான கலாச்சாரத்தையும் மொழியையும் வெளிப்படுத்த பயன்படுவது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் சிறை திரும்புகிறார் சசிகலா :

General News, Politics
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை பார்க்க கடந்த 6ம் தேதியன்று 5 நாள் அவசரகால பரோலில் வெளியே வந்தார். இன்றுடன் 5 நாட்கள் முடிவடையும் நிலையில், பரோல் நீட்டிப்பு கோரி சசிகலா தரப்பில் இதுவரை எந்தவித மனுவும் தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் சிறைக்கு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருணைக் கொலைக்கு மத்திய அரசு ஆதரவு:

General News, NEWS
நீண்ட நாட்களாக கோமாவில் உள்ள நோயாளிகளை கருணை கொலை செய்யும் நடைமுறைக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், இதற்கான சட்ட மசோதா தயாராக இருப்பதாகவும், விரைவில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு.

General News, Politics
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், மாநில தேர்தல் ஆணையம் அதனை செயல் படுத்தாததால் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பரோலில் வெளிவந்த சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் :

Politics
அதிமுக அம்மா அணியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து 5 நாட்கள் பரோலில் இன்று வெளிவந்தார். முன்னதாக கணவர் நடராஜனின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதால் அவர் பரோல் மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்ற சிறைத்துறை தமிழக காவல்துறையுடன் ஆலோசித்து பின்னர் கடும் நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி : * வீட்டிலிருந்து மருத்துவமனை, மருத்துவமனையிலிருந்து வீடு தவிர வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது. * காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மருத்துவமனையில் இருக்க அனுமதி. * நள்ளிரவு நேரங்களில் மிக அவசியமான சூழல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தகவல் தந்துவிட்டு செல்ல வேண்டும். * ஊடகங்களை சந்தித்து எந்த கருத்துக்களையும் தெரிவிக்கக்கூடாது. * பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது. * சசிகலா தாமாகவே, எந்த அ

பரோல் வழங்கியது கர்நாடக சிறைத்துறை : இன்று மாலை சென்னை வருகிறார் சசிகலா.

General News, NEWS
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியது கர்நாடக சிறைத்துறை. முன்னதாக, தமிழக காவல்துறை சார்பில் 18 நிபந்தனைகள் விதிக்க கர்நாடக சிறைத்துறைக்கு பரிந்துரை செய்தது. இதனையேற்ற கர்நாடக சிறைத்துறை அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது உள்பட 18 நிபந்தனைகள் அடங்கிய தமிழக காவல்துறையின் கடிதத்தை சசிகலாவிடம் கொடுத்து ஒப்புதல் பெற்றது.இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே வருவார் என்றும், இன்று மாலைக்குள் சென்னை வந்தடைவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார் புரோஹித் :

General News, NEWS
தமிழகத்தின் புதிய ஆளுநராக இன்று பதவியேற்றார் பன்வாரிலால் புரோஹித் (77 வயது). சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தமிழகத்தின் 29வது ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோஹித்துக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர், திமுக அதிமுக காங்கிரஸ் எம்எல்ஏ'க்கள், எம்பிக்கள் மற்றும் பாஜகவினர் பங்கேற்று புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

வெளியே வருகிறார் சசிகலா :

Politics
சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை சந்திக்க, நாளை பெங்களுரு பரப்பனஅக்ரஹாரா சிறையிலிருந்து பரோலில் வெளியே வருகிறார் சசிகலா. நாளை பிற்பகல் கிளம்பி மாலையில் சென்னை வர வாய்ப்பிருப்பதாகவும், பரோலில் வெளியே இருக்கும் நாட்களில் அரசியல் ரீதியாகவோ, கட்சி ரீதியாகவோ யாரையும் சந்திக்ககூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பரோல் மனுவில் குறிப்பிட்டுள்ள இடத்தில் மட்டுமே தங்கவேண்டும் என்ற கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

18 எம்எல்ஏ’க்கள் தகுதி நீக்கம் : இன்று விசாரணை.

General News, Politics
டிடிவி.தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ'க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த விவகாரம். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை. முன்னதாக நடந்த விசாரணையில் 18 எம்.எல்.ஏ'க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“நாட்டை விட்டு ஓடுவேன் என்றவர்களுக்கு அரசியலில் இடம் கொடுக்கக் கூடாது” : ராதாரவி.

Politics
சென்னை தேனாம்பேட்டையிலுள்ள கலைஞர் அரங்கத்தில், திமுக எம்.பி திருச்சி சிவா தலைமையில் இன்று நடைபெற்ற திமுக பேச்சாளர்களை நெறிப்படுத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி, "சினிமாத் துறையினரை அரசியலில் வளர்த்து விடக் கூடாது, முக்கியமாக நாட்டை விட்டு ஓடுவேன் என்றவர்களுக்கு அரசியலில் இடம் கொடுக்கக் கூடாது" என்று நடிகர் கமல்ஹாசனை சாடினார். மேலும், நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என்று மக்களை குழப்பி வருகிறார் என்றும் தெரிவித்தார்.