General News

டென்மார்க் பேட்மிட்டன் தொடர் : ஸ்ரீகாந்த் சாம்பியன்.

Sports
டானிஷா டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் தொடரில் கொரிய வீரர் லீ ஹியூனை 21-10, 21-5 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடம்பி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஆசிய கோப்பை ஹாக்கி : இந்திய அணி சாம்பியன்.

Sports
வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி இறுதி போட்டியில் மலேசிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

நியூசிலாந்து அணி அபார வெற்றி : கோஹ்லி சதம் வீண்.

Sports
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. 281 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி டாம் லாதம்'ன் (104* ரன்கள்) நிதான சதத்தின் உதவியுடன் 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. முன்னதாக இந்திய அணி சார்பில் கேப்டன் கோஹ்லி சதம் (121 ரன்கள்) அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

200வது போட்டியில் சதம் : கோஹ்லி அசத்தல்.

Sports
நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நடைபெற்று வரும் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 121 ரன்கள் (125 பந்துகள்) தனது 31வது சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். இது இவர் பங்கேற்கும் 200-வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்துள்ளது.

சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு ரூ.1லட்சம் அபராதம்:

General News
வேலூர் மாவட்டம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில், கலெக்டர் தலைமையில் நேற்று காலை ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, அங்கு பழைய டயர்கள், இரும்பு கம்பிகள், பெயின்ட் டப்பாக்கள் என கழிவுகள் தேங்கி கிடந்தன. அதில் மழை நீர் தேங்கி கொசுப் புழுக்கள் உற்பத்தியாகி இருந்தன. இதன் மீது நடவடிக்கை எடுத்த கலெக்டர் ராமன், சுங்கச்சாவடி நிர்வாகம் மீது ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா :

Sports
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 4-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.

“சினிமா” தமிழர்களின் கலாசார பிரதிபலிப்பு : ராகுல்காந்தி.

General News, Politics
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள 'மெர்சல்' படத்தில் மத்திய அரசுக்கு எதிரான மற்றும் போலியான கருத்துக்கள் இருப்பதாகவும், அதை உடனே நீக்க வேண்டும் என தமிழக பா.ஜ.கவினர் குரல் கொடுத்து வரும் நிலையில்., தற்பொழுது மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்து, ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார் ராகுல்காந்தி. அதில், "படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்களின் பெருமையை மதிப்பிழக்க செய்ய வேண்டாம். தமிழகத்தில் சினிமா என்பது அவர்களின் ஆழமான கலாச்சாரத்தையும் மொழியையும் வெளிப்படுத்த பயன்படுவது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோல் பங்க் ஸ்டிரைக் வாபஸ் :

General News
தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணய முறைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13ம் தேதி நடைபெறவிருந்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம், வரும் 13ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்களும் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சிறை திரும்புகிறார் சசிகலா :

General News, Politics
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை பார்க்க கடந்த 6ம் தேதியன்று 5 நாள் அவசரகால பரோலில் வெளியே வந்தார். இன்றுடன் 5 நாட்கள் முடிவடையும் நிலையில், பரோல் நீட்டிப்பு கோரி சசிகலா தரப்பில் இதுவரை எந்தவித மனுவும் தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் சிறைக்கு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சந்தானம் முன்ஜாமின் கோரி மனு :

Cinema News, General News
பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் கட்டட ஒப்பந்ததாரர் மற்றும் வழக்கறிஞரை தாக்கிய சம்பவம் தொடர்பாக முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சந்தானம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.