Cinema News

‘மெர்சல்’ பட டீசர் தேதி அறிவிப்பு :

Cinema News
விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் படத்தின் டீசர், இயக்குனர் அட்லீ'யின் பிறந்தநாளான செப்டம்பர் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக் குழு அறிவித்துள்ளது.

பிரபல நடிகர் ‘அல்வா வாசு’ கவலைக்கிடம் :

Cinema News
தமிழில் நகைச்சுவை கதாபாத்திரம், குணசித்திர வேடம் என சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்தவர் 'அல்வா வாசு'. இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த இவர் ஆரம்ப காலத்தில் சில படங்களில் நடித்து வந்தார். பின்னர், நடிப்பே பிரதானமாக மாற்றிக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திய இவர் தற்பொழுது மிகவும் பிரபல நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் பதிந்து விட்டார். அமைதிப்படை , சூப்பர் ஸ்டாரின் அருணாச்சலம் , சிவாஜி , நடிகர் சத்யராஜுடன் பல படங்கள் என இவர் நடித்த படங்கள் மிகவும் பிரபலம். . இவ்வாறான சூழலில் கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று அவர் உடல் நிலை தொடர்ந்து அபாய கட்டத்திற்கு செல்வதை அறிந்த மருத்துவர்கள் இனி அவருக்கு எந்த சிகிச்சையும் பலன் அளிக்காது, அதனால் அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல

சிவாஜி கணேசன் சிலை : நடிகர் சங்கம் தீர்மானம்.

Cinema News
நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த வாரம் சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டது. இதற்கு மக்கள், அரசியல்வாதிகள், சினிமாத்துறையினர் என அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று கூடியது. கூட்டத்தின் முடிவில் "சென்னை காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ சிவாஜி கணேசன் சிலையை நிறுவ வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கலைஞானி கமல்ஹாசனின் கலையுலக வயது 58 :

Cinema News
'களத்தூர் கண்ணம்மா' நடிகர் கமல்ஹாசனின் முதல் திரைப்படம். 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி வெளிவந்த இப்படம் அன்றே 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பில், ஏ. பீம்சிங் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெமினி கணேசன், டி.எஸ்.பாலைய்யா, சாவித்திரி, மனோரமா போன்ற நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக 'செல்வம்' என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் அறிமுகமானார். அப்பொழுது அவருக்கு 5 வயது (பிறப்பு : நவ.7,1954). தவறான சூழ்நிலைகளினால் பிரிந்து செல்லும் இளம் தம்பதிகளையும், அவர்களுக்குப் பிறக்கும் அப்பாவி மகனையும் அவன் அனாதை இல்லத்தில் வளர்வதைப் பற்றியும் தத்ரூபமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதோடு, வர்த்தக ரீதியாகவும் வெற்றி கண்டது. அதுமட்டுமன்றி இந்திய மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஜனாதிபதியின் தங்கப்பதக்க விருது போ

ஃபெப்சி போராட்டம் : நாளை மறுநாள் பேச்சுவார்த்தை.

Cinema News
ஃபெப்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே நடைபெற்று வரும் பிரச்சனையை சுமூகமாக தீர்க்கும் வண்ணம் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என ஃபெப்சி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’  படத்திற்கு சான்றிதழ் தர தணிக்கைக் குழு மறுப்பு?!

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்திற்கு சான்றிதழ் தர தணிக்கைக் குழு மறுப்பு?!

Cinema News
எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர். ரம்யா தயாரித்திருக்கும் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன' படத்திற்கு சென்ஸார் மறுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் 'திலகர்' படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், இரண்டு பேர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஒருவர் ஐஸ்வர்யா தத்தா. இன்னொருவர் அஞ்சனா. இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்'கோபி, ‘சதுரங்க வேட்டை' புகழ் வளவன், 'நான் மகான் அல்ல'ராம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று சென்ஸார் அதிகாரிகளால் தணிக்கை செய்ய பார்க்கப்பட்டது. இதுகுறித்து இயக்குநர் ராகேஷ் கூறியதாவது, 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன' இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்திய கதையாகும். ஒவ்வொரு நாளும் பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் சமூக விரோத சம்பவங்