Cinema News

மெர்சல் படக்குழுவுடன் படம் பார்த்த கமல் :

Cinema News
நடிகர் விஜய், இயக்குநர் அட்லி மற்றும் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி'யுடன் ஒன்றாக மெர்சல் திரைப்படத்தை பார்த்து ரசித்த கமல்ஹாசன்.

அடுத்த சிக்கலில் ‘மெர்சல்’ :

Cinema News
விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு வெளிவரவிருக்கும 'மெர்சல்' திரைப்படம் வழக்கு, தடை என தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று விலங்குகள் நலவாரியம் மூலம் மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. "படத்தில் புறா பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு விலங்குகள் நல வாரியத்திடம் முறையான அனுமதி பெறவில்லை. மேலும், அது கிராபிக்ஸ் புறா என்றால் அதற்கான ஆதாரத்தையளித்து உறுதிபடுத்த வேண்டும் என்றும், படத்தின் மற்றொரு காட்சியில் ராஜநாகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அறிக்கையில் நாகப்பாம்பு என குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்று கூறும் விலங்குகள் நலவாரியம் படத்தை வெளியிட அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகமும், குழப்பமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

நடிகர் சந்தானம் முன்ஜாமின் கோரி மனு :

Cinema News, General News
பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் கட்டட ஒப்பந்ததாரர் மற்றும் வழக்கறிஞரை தாக்கிய சம்பவம் தொடர்பாக முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சந்தானம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கேளிக்கை வரி : தீபாவளி முதல் திரையரங்குகள் ஸ்டிரைக்.

Cinema News
திரையரங்குகள், திரைப்படங்கள் மீது ஏற்கனவே நடைமுறையில் உள்ள GST வரி விதிப்பு நீங்கலாக, தமிழக அரசு தற்பொழுது கூடுதலாக 10% கேளிக்கை வரி விதிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழக அரசு கேளிக்கை வரியை உடனே ரத்து செய்யாவிட்டால், தீபாவளி முதல் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் திரையரங்குகள் காலவரையின்றி மூடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், 10% கேளிக்கை வரியை தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால் வரும் 6ம் தேதி முதல் புதிய படங்களை திரையிட மாட்டோம் என்று அறிவித்துள்ளன.

“எங்கள் அய்யாவிற்கு இன்னும் பெரிதாக செய்வோம்” : ட்விட்டரில் கமல்.

Cinema News
சென்னை அடையாற்றில் தமிழக அரசால் கட்டப்பட்ட, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோருடன் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகுமார், விஷால், கார்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், விழா குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், " விழா இனிதே முடிவுற்றது. எங்கள் அய்யாவிற்கு இன்னும் இது போல் மட்டுமின்றி, இதை விட பெரிதாக செய்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் மரணம் :

Cinema News
பிரபல பாலிவுட் நடிகர் டாம் ஆல்டர் (67) புற்று நோய் காரணமாக சிகிச்சை பலனின்றி மும்பையில் நேற்று மாலை காலமானார். இவர் ஆஷிக்கி, காந்தி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘மெர்சல்’ படத்திற்குத் தடை : அறிக்கை வெளியீடு.

Cinema News
தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் (TSL) தயாரிப்பில், நடிகர் விஜய் நடிக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியிருக்கிறார். எதிர்வரும் தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு பெரும் சாதனை புரிந்துள்ளது. இந்த நிலையில், படத்தின் தலைப்பு தன்னுடையது எனவும், படத்திற்கு தடை விதிக்கக் கோரியும் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் 'மெர்சல்' படத்தை அக்.3ம் தேதி வரை வெளியிடக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். AR ஃபிலிம் பேக்ட்ரி என்ற நிறுவனத் தயாரிப்பாளரான மனுதாரர் ராஜேந்திரன், தனது மகனை கதாநாயகனாக வைத்து 'மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பில் படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இப்படத்தின் பெயரும், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மெர்சல்' என்ற பெயரும் ஒரே அர்த்தம