Author: admin

வரலாற்றுச் சரித்திரத்தில் இன்று :

General News
பிரேசில் (República Federativa do Brasil) தென் அமெரிக்காவில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதுமான நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு ஆகும். இதன் மக்கள்தொகை 192 மில்லியனுக்கும் மேற்பட்டது.பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. 7,491 கிமீ (4,655 மைல்) நீளமான கடற்கரை பிரேசிலுக்கு உண்டு. பிரேசிலின் அருகாமையில் உருகுவே, அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, பெரு, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகள் உள்ளன. அதாவது, எக்குவடோர், சீலே தவிர அனைத்து தென் அமெரிக்க நாடுகளுடனும், பிரேசில் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு தீவுக் கூட்டங்களும் பிரேசிலின் ஆட்சிப் பகுதிக்குள் அடங்குகின்றன. பெர்னான்டோ டி நோரன்கா, ரோக்காசு அட்டோல், செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட

அசல் ஓட்டுநர் உரிம விவகாரம் : அரசு உத்தரவில் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் அறிவிப்பு.

General News
எதிர்வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் தங்கள் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று கடந்த வாரம் தமிழக அரசு உத்தரவிட்டது.தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரவில்லை. இதனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு முன்பு மனுதாரர் டிராபிக் ராமசாமி முறையிட்டார். அப்போது "வாடகை வாகனம் ஓட்டுபவர்கள், அலுவலக வாகன ஓட்டிகள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்திருப்பர், எனவே அவர்களால் அசல் உரிமத்தை கையில் வைத்திருக்க இயலாது. மேலும், அசல் உரிமம் தொலைந்தால் புதிய ஓட்டுநர் உரிமம் எட

வரலாற்றுச் சரித்திரத்தில் இன்று :

General News
திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

வரலாற்றுச் சரித்திரத்தில் இன்று :

General News
டி. எஸ். பாலையா (ஆகஸ்ட் 23, 1914 - ஜுலை 22, 1972), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.

“இந்த படத்தோடு செத்து விட்டாலும் பெருமை படுவேன்” : கதாநாயகன் உருக்கம்.

Uncategorized
பத்மஜா பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், S.N.ரெட்டி மற்றும் N.லஷ்மிகாந்த் தயாரிப்பில், அஜய் ஆண்ட்ரூஸ் நூதக்கி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நான் திரும்ப வருவேன்'. இலங்கையில் தமிழர்களுக்கு இளைக்கப்பட்ட துரோகத்தையும், அதற்கான போராட்டங்களையும், இங்கு தமிழகத்தில் நடைபெற்றது போல் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். இதில் கதாநாயகனாக மனோஜ் குமார் நடித்துள்ளார். V. K.ராமராஜூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சிவா நந்திகம் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 20) அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய படத்தின் நாயகன் மனோஜ்குமார், "ஒவ்வொரு போராட்டத்திற்கும் நிச்சயம் ஒரு தலைவன் உருவாவான். அதுபோல் இலங்கையில் தமிழர்களின் ஆதரவாய் போரிட்ட தலைவன் மாண்டாலும், மீண்டும் ஒரு தலைவன் வேறு ஒரு ரூபத்தில் உருவாவான் என்பது இப்படம் 'நான் தி

இது இணைப்பு அல்ல ; பதவி ஆசைக்காக போடப்பட்ட உடன்படிக்கை : டிடிவி.தினகரன்.

Politics
"அதிமுகவின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இரு அணிகள் இணைந்தது இணைப்பு அல்ல, அவர்களின் சுயலாபத்திற்காகவும், பதவி ஆசைக்காகவும், பதவியை காப்பாற்றி கொள்வதற்காகவும் போடப்பட்ட வணிக ரீதியான உடன்படிக்கை" என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது அந்த இறைவனுக்குத் தான் தெரியும். புரட்சித் தலைவி மாண்புமிகு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமியையும் முதல்வராக்கி அழகு பார்த்த கழக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு துரோகம் செய்த இவர்களை தொண்டர்களும், பொதுமக்களும் மன்னிக்க மாட்டார்கள்" என்றும் தெரிவித்தார்.