Author: admin

வரலாற்றுச் சரித்திரத்தில் இன்று :

General News
உலக புகைப்பட நாள் (World photograph day) புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வரலாறு : 20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. உதாரணமாக, சீனவீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன், வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் போட்டோ ஆகியவற்றை சொல்லலாம். 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகள

பெட்ரோல், டீசல் : இன்றைய விலை நிலவரம்.

General News
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட்- 18) காலை 6 மணி முதல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.70.76 பைசாவிற்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.60.30 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

வரலாற்றுச் சரித்திரத்தில் இன்று :

General News
நேதாஜி என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897– இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகஸ்ட் 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், உருசியாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகல்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை : ஓபிஎஸ் கோரிக்கைக்கு எடப்பாடி ஆதரவா ?

Politics
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும், அவரது போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார். இதன் மூலம், ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கையை முதலமைச்சர் வெளிப்படையாக ஆதரிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி மற்றும் டிடிவி அணி என மூன்றாக பிரிந்துவிட்டது. பின்னர், இணைப்புக்கான பேச்சுவார்த்தையின் ஆரம்ப கட்டத்தில் சசிகலா தரப்பினரை கட்சியை விட்டு விலக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தது ஓபிஎஸ் அணி. இதனை ஏற்க மறுத்த எடப்பாடி அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆளுக்கொரு அறிக்கை விடுத்தனர். பின்னர், டிடிவி தினகரனை மட்டும் கட்சியை விட்டு ஒதுக

ஸ்பானிஸ் சூப்பர் கோப்பை: ரியல் மாட்ரிட் சாம்பியன்.

Sports
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற ஸ்பானிஸ் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணியை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஸ்பானிஸ் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டிக்கு பார்சிலோனா மற்றும் ரியல் மார்டிட் அணிகள் தகுதிபெற்றிருந்த நிலையில், இறுதிப்போட்டிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. அதன்படி முதற்கட்ட இறுதிப்போட்டி கடந்த 14ம் தேதி நடைபெற்றது இதில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை மாட்ரிட் நகரில் நடைபெற்ற இரண்டாவது கட்ட இறுதிப்போட்டியிலும் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5-1 என்ற மொத்த கோல் அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

பெட்ரோல், டீசல் : இன்றைய விலை நிலவரம்.

General News
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட்- 17) காலை 6 மணி முதல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.70.70 பைசாவிற்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.60.42 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.