Author: admin

சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு அபராதம்:

Uncategorized
அஹமதாபாத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவரான சக்சேனா என்பவர் மீது, பிரபல சமூக ஆர்வலர் மேதா பட்கர் டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இதைப்போல மேதா பட்கர் மீது சக்சேனாவும் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் பல முறை வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தவிர்த்து வந்த அவருக்கு கடந்த மே மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு பின்னர் அடுத்த மாதமே அது நீக்கப்பட்டது. ஆனாலும் அவர் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இத்தகைய சூழலில் நேற்றைய விசாரணைக்கும் அவர் ஆஜராகாத நிலையில் நீதிபதி விக்ராந்த் வாய்த், அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். வழக்கில் ஆஜராக மேலும் ஒரு வாய்ப்பு தருவதாகவும், அதிலும் ஆஜராகவில்லையெனில் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்றும் ந

பெட்ரோல், டீசல்: இன்றைய விலை நிலவரம்.

General News
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட்- 4) காலை 6 மணி முதல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.68.34 பைசாவிற்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.59.04 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

வரலாற்றுச் சரித்திரத்தில் இன்று:

General News
பராக் உசைன் ஒபாமா (Barack Hussein Obama) (பிறப்பு: ஆகஸ்ட் 4, 1961). அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார், நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார். அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

கமல் நிலையை நினைத்து கவலை : நாஞ்சில் சம்பத்.

NEWS
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை இன்று நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், "அதிமுக அரசு ஒரு ஊழல் அரசு என்று கூறுபவர்கள் ஆதாரத்துடன் கூற வேண்டும். நடிகர் கமல்ஹாசனும் அரசு ஊழலில் திளைத்திருப்பதாகக் கூறுகிறார். அவருக்கு தற்பொழுது சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டது. அதனால் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். ஒரு மிகப்பெரிய கலைஞனுக்கு இது போன்றதொரு நிலைமை ஏற்பட்டிருப்பது என்னை கவலையில் ஆழ்த்தியுள்ளது" என்று தெரிவித்தார்.

பிரேக்கிங் நியூஸ்

NEWS
“நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு நிரந்தர விலக்குக் கிடைக்க வாய்ப்பில்லை”- மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

பேருந்து மீது விளம்பர பலகை விழுந்து விபத்து :

General News
சென்னை அண்ணாசாலை, ஸ்பென்சர் அருகே மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து பாரிமுனை சென்ற அரசு பேருந்து மீது வழிகாட்டு விளம்பரப் பெயர் பலகை விழுந்து விபத்து. 6 பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் ராயப்பேபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வரலாற்றுச் சரித்திரத்தில் இன்று :

General News
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1976 ஆகஸ்ட் 3 ஆம் நாள் மத்திய அரசால் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகமாகியது. திண்டுக்கல் மாவட்டத்தின் காந்திகிராமத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கிராம சமுதாய அறிவியல், கிராம வளர்ச்சி, அயல்நாட்டு மொழிகள், தமிழ், இந்திய மொழிகள், கிராமியக் கலைகள், கிராம சுகாதாரம் மற்றும் நலவாழ்வு போன்ற துறைகள் இங்கு உள்ளன.

ஃபெப்சி போராட்டம் : நாளை மறுநாள் பேச்சுவார்த்தை.

Cinema News
ஃபெப்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே நடைபெற்று வரும் பிரச்சனையை சுமூகமாக தீர்க்கும் வண்ணம் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என ஃபெப்சி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

நீட் தேர்விலிருந்து விலக்கு சாத்தியமில்லை :

General News
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மருத்துவ மாணவர்கள் சேர்க்கைகான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் டெல்லியில் முகாமிட்டுள்ளார். ஆனால் அது சாத்தியமில்லாத ஒன்று. மேலும், நேர்மையாக வர்த்தகம் செய்யும் யாருக்கும் ஜி.எஸ்.டி'யால் எந்த வித பாதிப்பும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.