Author: admin

டென்மார்க் பேட்மிட்டன் தொடர் : ஸ்ரீகாந்த் சாம்பியன்.

Sports
டானிஷா டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் தொடரில் கொரிய வீரர் லீ ஹியூனை 21-10, 21-5 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடம்பி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஆசிய கோப்பை ஹாக்கி : இந்திய அணி சாம்பியன்.

Sports
வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி இறுதி போட்டியில் மலேசிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

நியூசிலாந்து அணி அபார வெற்றி : கோஹ்லி சதம் வீண்.

Sports
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. 281 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி டாம் லாதம்'ன் (104* ரன்கள்) நிதான சதத்தின் உதவியுடன் 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. முன்னதாக இந்திய அணி சார்பில் கேப்டன் கோஹ்லி சதம் (121 ரன்கள்) அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மெர்சல் படக்குழுவுடன் படம் பார்த்த கமல் :

Cinema News
நடிகர் விஜய், இயக்குநர் அட்லி மற்றும் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி'யுடன் ஒன்றாக மெர்சல் திரைப்படத்தை பார்த்து ரசித்த கமல்ஹாசன்.

200வது போட்டியில் சதம் : கோஹ்லி அசத்தல்.

Sports
நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நடைபெற்று வரும் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 121 ரன்கள் (125 பந்துகள்) தனது 31வது சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். இது இவர் பங்கேற்கும் 200-வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்துள்ளது.

சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு ரூ.1லட்சம் அபராதம்:

General News
வேலூர் மாவட்டம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில், கலெக்டர் தலைமையில் நேற்று காலை ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, அங்கு பழைய டயர்கள், இரும்பு கம்பிகள், பெயின்ட் டப்பாக்கள் என கழிவுகள் தேங்கி கிடந்தன. அதில் மழை நீர் தேங்கி கொசுப் புழுக்கள் உற்பத்தியாகி இருந்தன. இதன் மீது நடவடிக்கை எடுத்த கலெக்டர் ராமன், சுங்கச்சாவடி நிர்வாகம் மீது ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா :

Sports
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 4-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.

“சினிமா” தமிழர்களின் கலாசார பிரதிபலிப்பு : ராகுல்காந்தி.

General News, Politics
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள 'மெர்சல்' படத்தில் மத்திய அரசுக்கு எதிரான மற்றும் போலியான கருத்துக்கள் இருப்பதாகவும், அதை உடனே நீக்க வேண்டும் என தமிழக பா.ஜ.கவினர் குரல் கொடுத்து வரும் நிலையில்., தற்பொழுது மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்து, ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார் ராகுல்காந்தி. அதில், "படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்களின் பெருமையை மதிப்பிழக்க செய்ய வேண்டாம். தமிழகத்தில் சினிமா என்பது அவர்களின் ஆழமான கலாச்சாரத்தையும் மொழியையும் வெளிப்படுத்த பயன்படுவது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சிக்கலில் ‘மெர்சல்’ :

Cinema News
விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு வெளிவரவிருக்கும 'மெர்சல்' திரைப்படம் வழக்கு, தடை என தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று விலங்குகள் நலவாரியம் மூலம் மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. "படத்தில் புறா பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு விலங்குகள் நல வாரியத்திடம் முறையான அனுமதி பெறவில்லை. மேலும், அது கிராபிக்ஸ் புறா என்றால் அதற்கான ஆதாரத்தையளித்து உறுதிபடுத்த வேண்டும் என்றும், படத்தின் மற்றொரு காட்சியில் ராஜநாகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அறிக்கையில் நாகப்பாம்பு என குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்று கூறும் விலங்குகள் நலவாரியம் படத்தை வெளியிட அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகமும், குழப்பமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.