அடுத்த சிக்கலில் ‘மெர்சல்’ :

விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு வெளிவரவிருக்கும ‘மெர்சல்’ திரைப்படம் வழக்கு, தடை என தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று விலங்குகள் நலவாரியம் மூலம் மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

“படத்தில் புறா பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு விலங்குகள் நல வாரியத்திடம் முறையான அனுமதி பெறவில்லை. மேலும், அது கிராபிக்ஸ் புறா என்றால் அதற்கான ஆதாரத்தையளித்து உறுதிபடுத்த வேண்டும் என்றும், படத்தின் மற்றொரு காட்சியில் ராஜநாகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அறிக்கையில் நாகப்பாம்பு என குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்று கூறும் விலங்குகள் நலவாரியம் படத்தை வெளியிட அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகமும், குழப்பமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *