மீண்டும் சிறை திரும்புகிறார் சசிகலா :

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை பார்க்க கடந்த 6ம் தேதியன்று 5 நாள் அவசரகால பரோலில் வெளியே வந்தார்.

இன்றுடன் 5 நாட்கள் முடிவடையும் நிலையில், பரோல் நீட்டிப்பு கோரி சசிகலா தரப்பில் இதுவரை
எந்தவித மனுவும் தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் சிறைக்கு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *