ரவுடி ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டுவர ஏற்பாடு :

கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்ட பிரால ரவுடி ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டுவர, 24 மணி நேரத்தில் உரிய ஆவணங்களை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதன் பின்னர் அவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஸ்ரீதரின் மகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் உயர்நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், கம்போடிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க தயார் என மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. இதனை ஏற்ற நீதிபதி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *