பரோலில் வெளிவந்த சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் :

அதிமுக அம்மா அணியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து 5 நாட்கள் பரோலில் இன்று வெளிவந்தார்.

முன்னதாக கணவர் நடராஜனின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதால் அவர் பரோல் மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்ற சிறைத்துறை தமிழக காவல்துறையுடன் ஆலோசித்து பின்னர் கடும் நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி :

* வீட்டிலிருந்து மருத்துவமனை, மருத்துவமனையிலிருந்து வீடு தவிர வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது.

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மருத்துவமனையில் இருக்க அனுமதி.

* நள்ளிரவு நேரங்களில் மிக அவசியமான சூழல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தகவல் தந்துவிட்டு செல்ல வேண்டும்.

* ஊடகங்களை சந்தித்து எந்த கருத்துக்களையும் தெரிவிக்கக்கூடாது.

* பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது.

* சசிகலா தாமாகவே, எந்த அரசியல்வாதியையும் அழைத்து சந்திக்கக்கூடாது, வீட்டுக்கு வருபவர்களை சந்திக்க தடையில்லை., போன்ற நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *