பரோல் வழங்கியது கர்நாடக சிறைத்துறை : இன்று மாலை சென்னை வருகிறார் சசிகலா.

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியது கர்நாடக சிறைத்துறை.

முன்னதாக, தமிழக காவல்துறை சார்பில் 18 நிபந்தனைகள் விதிக்க கர்நாடக சிறைத்துறைக்கு பரிந்துரை செய்தது. இதனையேற்ற கர்நாடக சிறைத்துறை அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது உள்பட 18 நிபந்தனைகள் அடங்கிய தமிழக காவல்துறையின் கடிதத்தை சசிகலாவிடம் கொடுத்து ஒப்புதல் பெற்றது.இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே வருவார் என்றும், இன்று மாலைக்குள் சென்னை வந்தடைவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *