தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார் புரோஹித் :

தமிழகத்தின் புதிய ஆளுநராக இன்று பதவியேற்றார் பன்வாரிலால் புரோஹித் (77 வயது).

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தமிழகத்தின் 29வது ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோஹித்துக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர், திமுக அதிமுக காங்கிரஸ் எம்எல்ஏ’க்கள், எம்பிக்கள் மற்றும் பாஜகவினர் பங்கேற்று புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *