கேளிக்கை வரி : தீபாவளி முதல் திரையரங்குகள் ஸ்டிரைக்.

திரையரங்குகள், திரைப்படங்கள் மீது ஏற்கனவே நடைமுறையில் உள்ள GST வரி விதிப்பு நீங்கலாக, தமிழக அரசு தற்பொழுது கூடுதலாக 10% கேளிக்கை வரி விதிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழக அரசு கேளிக்கை வரியை உடனே ரத்து செய்யாவிட்டால், தீபாவளி முதல் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் திரையரங்குகள் காலவரையின்றி மூடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், 10% கேளிக்கை வரியை தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால் வரும் 6ம் தேதி முதல் புதிய படங்களை திரையிட மாட்டோம் என்று அறிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *