ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் : இந்திய அணி அறிவிப்பு.

இந்தியாவுக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி கடந்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி இந்தியா வந்தது. ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றியது.

இந்நிலையில் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய வீரர்களின் விவரம் :

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், தோனி, கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆஷிஷ் நெஹ்ரா, மற்றும் அக்ஷர் பட்டேல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *