“எங்கள் அய்யாவிற்கு இன்னும் பெரிதாக செய்வோம்” : ட்விட்டரில் கமல்.

சென்னை அடையாற்றில் தமிழக அரசால் கட்டப்பட்ட, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை திறந்து வைத்தார்.

விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோருடன் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகுமார், விஷால், கார்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், விழா குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், ” விழா இனிதே முடிவுற்றது. எங்கள் அய்யாவிற்கு இன்னும் இது போல் மட்டுமின்றி, இதை விட பெரிதாக செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *