“நான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் அல்ல” : யோகா குரு பாபா ராம்தேவ்.

மாட்டு மூத்திரத்தை தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சைகளுக்காக இஸ்லாமியர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர்களின் புனித நூலான குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பதஞ்சலி நிறுவன உரிமையாளர் யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளரும், சர்ச்சைக்கு பெயர் போன சாமியாருமான யோகா குரு பாபா ராம்தேவ், ‘மாட்டு முத்திரத்தை மருத்துவச் சிகிச்சைக்காக பயன்படுத்தலாம் என இஸ்லாமியர்களின் புனிதநூலான குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், பலர் எனது நிறுவனமான பதஞ்சலியை இந்து மதத்திற்கான நிறுவனம் என்று அவதூறு பரப்பி வருகிறார்கள். நான் என்றாவது இஸ்லாமிய சகோதரகளான ஹமீது சகோதரர்களின் ஹம்தார்த் நிறுவனம் மற்றும் ஹிமாலயா மருந்து நிறுவனத்திற்கு எதிராக பேசியுள்ளேனா? எனது முழு ஆதரவும் அவர்களுக்கு என்றும் உண்டு. இவ்வளவு ஏன் ஃபரூக் பாய் கொடுத்த இடத்தில்தான் எனது யோகா கிராமத்தை நிறுவியுள்ளேன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *