“நாட்டை விட்டு ஓடுவேன் என்றவர்களுக்கு அரசியலில் இடம் கொடுக்கக் கூடாது” : ராதாரவி.

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள கலைஞர் அரங்கத்தில், திமுக எம்.பி திருச்சி சிவா தலைமையில் இன்று நடைபெற்ற திமுக பேச்சாளர்களை நெறிப்படுத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி, “சினிமாத் துறையினரை அரசியலில் வளர்த்து விடக் கூடாது, முக்கியமாக நாட்டை விட்டு ஓடுவேன் என்றவர்களுக்கு அரசியலில் இடம் கொடுக்கக் கூடாது” என்று நடிகர் கமல்ஹாசனை சாடினார்.

மேலும், நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என்று மக்களை குழப்பி வருகிறார் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *