‘மெர்சல்’ படத்திற்குத் தடை : அறிக்கை வெளியீடு.

தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் (TSL) தயாரிப்பில், நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘மெர்சல்’. இப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியிருக்கிறார். எதிர்வரும் தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு பெரும் சாதனை புரிந்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் தலைப்பு தன்னுடையது எனவும், படத்திற்கு தடை விதிக்கக் கோரியும் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் ‘மெர்சல்’ படத்தை அக்.3ம் தேதி வரை வெளியிடக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

AR ஃபிலிம் பேக்ட்ரி என்ற நிறுவனத் தயாரிப்பாளரான மனுதாரர் ராஜேந்திரன், தனது மகனை கதாநாயகனாக வைத்து ‘மெரசலாயிட்டேன்’ என்ற தலைப்பில் படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இப்படத்தின் பெயரும், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ என்ற பெயரும் ஒரே அர்த்தம் உடையது. இது தன் படத்திற்கு பெரும் பின்னடைவைத் தரும் என்று அம்மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பிய கடிதங்களையும் அறிக்கையாக அவர் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *