சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் : நீதிபதிகள் கண்டனம்.

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் மணல் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பழனிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இன்று இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ரவுடிகள், சமூக விரோதிகளே பணியில் உள்ளனர். இதனை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளாதது ஏன் ? விதிமுறைகளை மீறும் சுங்கச்சாவடி ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? என்று கண்டனம் தெரிவித்தனர். பின்னர், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *