தங்கம் வென்ற தமிழக வீரர் :

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பின் நேற்றைய போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார்.

இவர், ஆண்களுக்கான 77 கிலோ எடை பிரிவின், ஸ்னாட்ச் பிரிவில் 148 கிலோவும், க்ளீன் & ஜெர்க் பிரிவில் 172 கிலோ என மொத்தமாக 320 கிலோ எடை தூக்கி தங்கம் வென்று அசத்தினார்.

இதன் மூலம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கு, சதீஷ் குமார் தகுதி பெற்றுள்ளார். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம், கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *