பிரபல நடிகர் ‘அல்வா வாசு’ கவலைக்கிடம் :

தமிழில் நகைச்சுவை கதாபாத்திரம், குணசித்திர வேடம் என சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்தவர் ‘அல்வா வாசு’. இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த இவர் ஆரம்ப காலத்தில் சில படங்களில் நடித்து வந்தார். பின்னர், நடிப்பே பிரதானமாக மாற்றிக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திய இவர் தற்பொழுது மிகவும் பிரபல நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் பதிந்து விட்டார். அமைதிப்படை , சூப்பர் ஸ்டாரின் அருணாச்சலம் , சிவாஜி , நடிகர் சத்யராஜுடன் பல படங்கள் என இவர் நடித்த படங்கள் மிகவும் பிரபலம். .

இவ்வாறான சூழலில் கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று அவர் உடல் நிலை தொடர்ந்து அபாய கட்டத்திற்கு செல்வதை அறிந்த மருத்துவர்கள் இனி அவருக்கு எந்த சிகிச்சையும் பலன் அளிக்காது, அதனால் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறி விட்டதாக அவரது மனைவி திருமதி.அமுதா வாசுதேவன் தெரிவித்துள்ளார். கவலைக்கிடமான நிலையில் உள்ள ‘அல்வா வாசு’விற்கு கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *