சிவாஜி கணேசன் சிலை : நடிகர் சங்கம் தீர்மானம்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த வாரம் சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டது. இதற்கு மக்கள், அரசியல்வாதிகள், சினிமாத்துறையினர் என அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று கூடியது. கூட்டத்தின் முடிவில் “சென்னை காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ சிவாஜி கணேசன் சிலையை நிறுவ வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *