கல்வித்துறை குறித்து விவாதம் : அன்புமணி பிரசெண்ட், செங்கோட்டையன் ஆப்ஸெண்ட் .

தமிழக அரசின் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து யாருடன் வேண்டுமானாலும் விவாதம் நடத்த தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் அறிவித்தார்.

அவரது சவாலை ஏற்ற பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அமைச்சருடன் விவாதம் நடத்த நாள், நேரம், இடம் என அனைத்தையும் அறிவித்ததுடன் இன்று (ஆக.12) மாலை சென்னை ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ் பேரவையில் மாலை 4 மணி முதல் 5 வரை அமைச்சரின் வருகைக்காக காத்திருந்தார். ஆனால் இறுதிவரை அமைச்சர் வராமல் ஜகா வாங்கி விட்டார். அமைச்சரின் இந்த செயல் தற்பொழுது பரபரப்பான நிகழ்வாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *