ஐஎஸ் தீவிரவாதிகள் கொடைக்கானலை தாக்க திட்டம் :

கடந்தாண்டு அக்.1ம் தேதியன்று ஐஎஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 8 பேரை கைது செய்தனர். 

இது தொடர்பான வழக்கு கேரள மாநிலம் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணை நாளான நேற்று என்ஐஏ அதிகாரிகள் துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 

அதில் “ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் கொடைக்கானலை தாக்க திட்டமிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல்லிற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நிலையில், வட்டகானல் பகுதியை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும்” அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

என்ஐஏ’வின் இந்த அறிக்கை தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *