துணை ஆட்சியரானார் சிந்து :

கடந்த ஆண்டு (2016) பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து.

ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவரான சிந்து’விற்கு அம்மாநில அரசு ரூ.3 கோடி ரூபாய் மற்றும் வீட்டு மனை ஒன்றை பரிசாக வழங்கியது. மேலும், அவருக்கு துணை ஆட்சியர் பதவியும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 27–ந் தேதி பி.வி.சிந்துவுக்கு துணை ஆட்சியருக்கான பணி நியமன ஆணையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட பி.வி.சிந்து ஆந்திர தலைமை செயலகத்தில் உள்ள நில நிர்வாக தலைமை ஆணையர் அலுவலகத்துக்கு சென்று முறைப்படி தனது துணை ஆட்சியர் பதவியை ஏற்றுக்கொண்டு அதற்குரிய ஆவணங்களில் கையெழுத்திட்டார். அப்பொழுது அவரது பெற்றோர்களும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *